அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அரசாங்கத்திற்கு எதிராக மீண்டும் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று (31) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டம்
ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு எதிராக நாங்கள் போராட்டங்களை முன்னெடுத்தோம். இந்த அரசாங்கம் ஆட்சியைப் பிடிக்க காரணமாக இருந்தது நாம் நடத்திய போராட்டங்கள்தான்.
ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த விடயத்தில் அக்கறை காட்டி செயல்படுவதற்கு பதிலாக, அரசாங்கம் புறக்கணிப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
எனவே இதற்கு எதிராக நாம் மீண்டும் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்.
மேலும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ஒழிப்போம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், தற்போது அதே சட்டத்தைப் பயன்படுத்தி பலஸ்தீனப் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களை கைது செய்கிறது என்று அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 2 நாட்கள் முன்

Tamizha Tamizha: சனிப்பெயர்ச்சி 2025... அதிர்ஷ்டத்தை தட்டித் தூக்கும் 3 ராசிகள்! குழப்பத்தில் தொகுப்பாளர் Manithan
