ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகள் குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
கடந்த 24 ஆண்டுகளாக நீடித்து வரும் ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகளை தீர்க்க அதிகபட்ச முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் வேதன முரண்பாடுகள் பி.சி. பெரேரா குழுவின் அறிக்கையின் ஊடாகவே ஏற்பட்டன. ஆனால் இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் எப்போதுமே ஒரு முக்கியதத்துவத்தை வழங்கி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பான அமைச்சரவை பத்திரம், இன்று மாலை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும், அதற்கு சாதகமான தீர்வைப் பெறமுடியும் என நம்புவதாக அவர் கூறினார்.
இந்த நிலையிலி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து நாளை அனைத்து ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் கலந்துரையாட வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் தங்கள் அழுத்தத்தை மாணவர்களை நோக்கி திருப்ப வேண்டாம் என்றும் அவர்களின் இணையக் கற்பித்தல் நடவடிக்கைகளைத் தொடருமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam