ஆசிரியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
பாடசாலை ஆசிரியர்களுக்கான தற்போதைய ஆடைக் கட்டுப்பாடு எந்தச் சந்தர்ப்பத்திலும் மாற்றப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எந்தவொரு நபருக்கும் தனக்கு ஏற்ற ஆடையை தெரிவு செய்யும் ஜனநாயக ரீதியான சுதந்திரம் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலை ஆசிரியைகள் வசதியான ஆடைகளை அணிந்து வர அனுமதிப்பது இந்நாட்டின் கலாசாரத்திற்கு புறம்பானது என மகாசங்கத்தினர் விடுத்துள்ள கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கோரிக்கை

ஆசிரியர்களின் உடையை மாற்றலாம், ஆனால் துறவறம் பூண்டவர்கள் தங்களது ஆடைகளை மாற்ற முடியாது என்பதால், இந்த கோரிக்கையை அந்நியப்படுத்த வேண்டாம் என்று ஜோசப் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 20 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam