நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர்கள்
தொழிற்சங்க நடவடிக்கைகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என ஆசிரியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய இலங்கையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் இன்று நாடு முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கம் இதுவரையில் சில பாடசாலைகளை திறப்பதற்கு தயாராகி உள்ள நிலையில் அதன் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தாம் தயாரில்லை என ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின், (Joseph Stalin ) “இன்றைய தினம் நாங்கள் இலங்கை முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் பலவற்றை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
ஆசிரியர் - அதிபர் சம்பள பிரச்சினைகளுக்கு 87 நாட்களாக அரசாங்கம் தீர்வு வழங்காமையினால் போராட்டத்தை தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 15 மணி நேரம் முன்

பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, ரூட்டை மாற்றிய பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன்... வைரலாகும் வீடியோ Cineulagam

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam
