ஆசிரியர் இடமாற்றம் விவகாரம்: இலங்கை ஆசிரியர் சங்கம் மீது குற்றச்சாட்டு!
ஆசிரியர்களின் இடமாற்றம் மற்றும் அவர்களின் தேவைகளை வீணடிக்கும் வகையில் இலங்கை ஆசிரியர் சங்கம் செயற்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப செயலாளர் காராளசிங்கம் பிரகாஷ் குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்று(10.03.2026) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்
தற்போது இரண்டு மாதங்களாக ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கி வருகின்ற வேளையிலும் மாகாண கல்வி பணிப்பாளரின் கீழே இயங்கி வந்த நான்கு ஆசிரியர் சங்கங்களையும் இயங்க விடாது.

அரசியல் சுயநல நோக்கத்திற்காக வழக்கு தாக்கல் செய்தமையால் தற்போது ஆசிரியர் சங்கங்கள் ஆசிரியர்களும் ஏமாற்றம் உள்ளிட்ட நலன்கள் பற்றி பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் பிரகாஷ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கட்சி அரசியலில் முக்கியத்துவம் கொடுக்கின்ற இலங்கை ஆசிரியர் சங்கம் தனது சகோதரி இடமாற்றம் தொடர்பில் ஆட்சேபனை தெரிவித்து மாகாண கல்வி திணைக்களத்துடன் இயங்கிய தமது சங்கங்களை பிரித்து வழக்கு தாக்கல் செய்துள்ளமை ஆசிரியர்களின் நலன்களை பாதிக்கும் விடயம் என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

நிம்மதியாக இருக்க கொடைக்கானல் சென்ற ஜனனி தேடிவந்த ஆபத்து... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri