புதிய வகை கொக்கு இனங்கள் உணவுகளை தேடி வயல் நிலங்களுக்குள்..!
தற்போது இடம்பெற்று வரும் சிறுபோக செய்கைக்கான நெற்செய்கையை அடுத்து இயந்திரம் மூலமான தரையை சமப்படுத்தும் நடவடிக்கை திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு விவசாய பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் தம்பலகாமம் வயல் நிலப்பகுயில் நிலத்தை சமப்படுத்தும் வயல் பகுதியில் புதிய வகை கொக்கு இன பறவைகள் அதிகமாக அதனை நோக்கி வருவதனை அவதானிக்க முடிகிறது.
உழவடுக்கும் சந்தர்ப்பம்
இதில் மஞ்சள், வெள்ளை நிற வகை கொக்கு இனங்களும் வெளிநாட்டு இன வகையை சேர்ந்த பறவைகளும் இயந்திரம் மூலமான தரையை உழவடுக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த பகுதிகளை நோக்கி நகர்கின்றன.

இதன் மூலமாக உணவுகளை தேடி குறித்த கொக்கு இனங்கள் படை எடுப்பதால் வித்தியாசமாக அதிகளவான மக்கள் இதனை இரசிக்கின்றனர்.
சுற்றுலாத் துறை பயணிகள் கூட இதனை அண்மைக்காலமாக இரசித்து பார்வையிட்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கான கொக்குகள் ஒரே தடவையில் உணவுகளை தேடி நகர்கின்றமை குறிப்பிடத்தக்கது.



