ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தாருமாறு வலியுறுத்தி போராட்டம் (Video)
ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு வலியுறுத்தி நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட தலவாக்கலை, வட்டகொட சிங்கள மகா வித்தியாலய மாணவர்களின் பெற்றோர்கள் இன்று (22) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் பாடசாலைக்கு முன்பாக நடைபெற்றது.
தமது பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு நுவரெலியா கல்வி பணிமனைக்கு அறிவித்தும் அதற்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.
தமது பாடசாலையில் தமிழ் மற்றும் சிங்களம் பேசும் மாணவர்கள் கல்வி கற்கின்றதோடு, தரம் 6 முதல் 11 வரையுள்ள வகுப்புகளுக்கு கற்பிக்க ஒரேயொரு ஆங்கில பாட ஆசிரியர் மாத்திரமே உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் கணிதம் உள்ளிட்ட பிரதான பாடங்களை கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை எனவும் இதனால் பெரும்பாலான மாணவர்கள் பாடசாலையில் இருந்து இடை விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலைமை தொடருமானால் பாடசாலையில் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைவடையும் எனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
எனவே பாடசாலைக்கு தேவையான ஆசிரியர்களை பெற்று தருவதாக அதிகாரிகள் எழுத்து மூலம் உறுதியளிக்கும் வரை போராட்டம் தொடரும் என ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri