ஆசிரியர் நியமன நேர்முகப் பரீட்சை: கல்வி அமைச்சு விளக்கம்
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில ஊடகக் கற்றல் வெற்றிடங்களுக்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையை அடுத்து, நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.ஜே.எஸ்.எஸ். எதிரிசூரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 23,600 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.
ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பின்படி, வெற்றிடங்களின் எண்ணிக்கையைப் போல் இரு மடங்கு - அதாவது 46,012 விண்ணப்பதாரர்கள்—நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட வேண்டும்.
முரண்பாடுகள்
ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட நேர்முகப் பரீட்சைப் பட்டியலில் 17,688 விண்ணப்பதாரர்களின் பெயர்கள் மட்டுமே காணப்பட்டமையால் முரண்பாடுகள் எழுந்தன.

இருப்பினும், ஒரே விண்ணப்பதாரர் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களுக்கும் பதவிகளுக்கும் தகுதி பெற்றுள்ளதால், இந்தப் பட்டியல் குறைந்த எண்ணிக்கையைக் காட்டுவது போல் தோன்றுகிறது.
எனவே, பெயர்களின் எண்ணிக்கையை மட்டும் கணக்கிடாமல், ஒவ்வொரு தகுதியான விண்ணப்பதாரரும் பூர்த்தி செய்யக்கூடிய பாடப் பிரிவுகள் மற்றும் வெற்றிடங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
உதாரணமாக, வரையறுக்கப்பட்ட ஆட்சேர்ப்புத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே அரச சேவையில் உள்ள 192 பட்டதாரிகள், 8 பாடங்களிலும் தகுதி பெற்றுள்ளதன் மூலம் 1,536 வெற்றிடங்களை பூர்த்தி செய்ய முடியும் ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்கள் மற்றும் பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றுள்ளதால், வெற்றிடங்களை விட இரு மடங்கு விண்ணப்பதாரர்களை அழைக்கும் தேவைப்பாடு பூர்த்தியாகியுள்ளது.
இதன் மூலம், அனைத்து பாட சேர்க்கைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்ட பின், சுமார் 46,018 விண்ணப்பதாரர்கள் நேர்முகப் பரீட்சை செயல்முறைக்குத் தகுதி பெற்றுள்ளனர் இருப்பினும், சில பாட சேர்க்கைகளுக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் போதியளவு இன்மையால் சில வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
மாகாண ரீதியாக 41 பாட சேர்க்கைகளுக்கு எவ்வித விண்ணப்பதாரர்களும் தகுதி பெறவில்லை என்பதோடு, 124 பாட சேர்க்கைகளுக்குப் போதுமான தகுதியான விண்ணப்பதாரர்கள் கிடைக்கவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞானசார விடயத்தை தமிழீழ விடுதலை புலிகளுடன் கோர்த்து விடும் பயங்கர சதி! திரைமறைவில் செயற்படும் அரசியல் பலம்...
450-க்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள் திரும்பவே இல்லை: அமெரிக்க செயலருக்கு பிரித்தானியா கண்டனம் News Lankasri