வத்தளையில் நடந்த பெரும் சோகம் - பாதையை கடக்க முற்பட்ட ஆசிரியை பலி
வத்தளையில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வத்தளை நகரில் இன்று முற்பகல் கவனயீனமாக பாதையை கடக்க முயன்ற பாடசாலை ஆசிரியை லொறியொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
சிலர் வெள்ளைக் கடவையின் ஊடாக பாதையை கடந்து சென்றதைத் தொடர்ந்து, குறித்த ஆசிரியை திடீரென பாதைக்கு குறுக்கே பயணிக்க முற்பட்ட போதே எதிர்பாராத விதமாக இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் வத்தளை புனித அன்னம்மாள் மகளிர் மகா வித்தியாலயத்தின் தமிழ் பிரிவில் கற்பித்து வந்த 48 வயதுடைய ஜெ.சசிகலா என்ற ஆசிரியை எனத் தெரிய வந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan