ஆறு அடி அளவு கொண்ட சொந்த காணியை நகரசபைக்காக விட்டுக் கொடுத்த நபர்
கிண்ணியாவில் நபரொருவர் தனது காணியின் சுமார் 6 அடி பகுதியை நகரசபைக்காக விட்டுக் கொடுத்துள்ள சம்பவம் அனைவர் கவனத்தையும் பெற்றுள்ளது.
கிண்ணியா - 05, பெருந்தெரு Panacea தனியார் வைத்தியசாலை சந்தியில் போக்குவரத்தை இலகுபடுத்துவதற்காக தங்களுடைய சுற்று மதிலை உடைத்து அகலமாக்கி தர முடியுமா என கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி கிண்ணியா வலய கல்வி அலுவலகத்தில் ஆசிரியர் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரியாக கடமை புரியும் ஜலால்தீன் நாம்தீன்யிடம் கோரியுள்ளார்.
புதிய மதில் அமைப்பு
அவரோ எந்த மறுப்பும் தெரிவிக்காது மனமுவந்து சுமார் 6 அடிக் காணியை சுற்று வளைவிற்காக விட்டு புதிய மதிலை அமைத்துள்ளார்.
அரச காணியை சட்டவிரோதமான அபகரிப்பே அதிகமாக காணப்படும் தருணத்தில் குறித்த ஆசிரியரின் செயற்பாட்டை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri