ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கப் போராட்டத்தினால் போக்குவரத்திற்கு பாதிப்பு
ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்திற்கு எதிரில் ஆரம்பமான இந்த எதிர்ப்பு பேரணி ஜனாதிபதி செயலகம் நோக்கி நகரும் என இலங்கை ஆசிரியர் ஒன்றியத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்றுடன் 11ம் நாளாக இணைய வழி கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து ஆசிரியர்கள் விலகிக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரிய, அதிபர் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக குறித்த பகுதியில் கடுiயான வாகன நெரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளது.





தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
