புத்தளத்தில் கடுமையாக தாக்கப்பட்ட ஆசிரியர்: மாணவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு(Photos)
புத்தளம்- தில்லையடி பகுதியில் சாதாரண தர மாணவர்களால் தாக்கப்பட்ட ஆசிரியர் தொடர்பான வழக்கில் மாணவர்களுக்கு கடுமையான நிபந்தனைகளின் கீழ் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு ஏற்றவாறு தலைமுடி மற்றும் தாடியை சீர்படுத்துமாறு அறிவுறுத்தியதற்காக மாணவர்கள் குறித்த ஆசிரியரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த (24.05.2023) ஆம் திகதி சம்பவம் தொடர்பில் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் (25.05.2023) 17 மாணவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கையொப்பமிட உத்தரவு
இதன்போது கைதுசெய்யப்பட்ட 21 மாணவர்களுக்கும் கடுமையான நிபந்தனையின் கீழ் பினை வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சாதாரண தர பரீட்சைகள் முடிவடைந்தவுடன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் புத்தளம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று காலை 8 மணியிலிருந்து 12 மணிக்குள் கையொப்பமிடவேண்டுமென்றும் நீதவானினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
