சாதாரண தர பரீட்சைக்கு தயாரான மாணவர்களால் கடுமையாக தாக்கப்பட்ட ஆசிரியர் (Video)
புத்தளம் பகுதியில் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள், குறித்த பாடசாலையில் உடற்கல்வி கற்பிக்கும் ஆசிரியரை சரமாரியாக தாக்கி காயப்படுத்தியுள்ளர். சம்பத்துடன் தொடர்புடைய மாணவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மாணவர்கள் சரமாரியாக தாக்குதல்
புத்தளம் - தில்லையடி பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலை முடிவடைந்த உடன் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்களை கிழித்து பாதையில் வீசியுள்ளனர்.
இதனையடுத்து புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உடற்கல்வி ஆசிரியராக கல்வி கற்பிக்கும் எச்.எம் அஸ்கி என்ற ஆசிரியரை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களில் சிலர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
குறித்த சம்பவம் புத்தளம் - தில்லையடி பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
ஆதார வைத்தியசாலை
சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான அனுமதி அட்டை வழங்கப்பட்டதன் பின்னர் ஆசிரியரின் வீட்டின் நுழைவாயிலுக்கு கற்களினால் வீசியுள்ளனர்.
இதனையடுத்து ஆசிரியர் வெளியில் வந்து குறித்த இடத்தை விட்டுச் செல்லுமாறு கூறியுள்ளார்.
இதன்போது மாணவர்கள் கற்களை கையில் பொத்தி வைத்த நிலையில் முகத்தில் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
காயங்களுக்கு உள்ளான உடற்கல்வி ஆசிரியர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரினால் கைது
இதன்போது ஆசிரியரைத் தாக்கிய சில மாணவர்களில் 4 பேர் நேற்று இரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்
இதனையடுத்து சம்பவத்தில் தொடர்புடைய ஏனைய மாணவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
