வவுனியாவில் ஆசிரியரின் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் வைத்தியசாலையில் அனுமதி
வவுனியாவிலுள்ள பிரபல பாடசாலையில் கற்கும் மாணவனை ஆசிரியர் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றள்ளது.
பாதிப்படைந்த மாணவனை இன்று (21.09.2023) வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா நகர பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 9ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவருக்கு, அப் பாடசாலையின் பகுதித் தலைவராகிய ஆசிரியர் ஒருவர் தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கும் மேலாக தும்புத்தடி மற்றும் சப்பாத்து கால்களால் தாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
அதேவேளை காரணம் எதுவும் இன்றி தன்னைத்தாக்கியுள்ளதாக மாணவன் தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவன் இச்சம்பவத்தை பெற்றோரிடம் மறைத்துள்ளதாகவும் இதனால் அதிக மன அழுத்ததிற்கு உள்ளானதால் மாணவன் கடிதம் ஒன்றின் மூலம் தெரியப்படுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து மாணவனை வைத்தியசாலையில் அனுமதித்த பெற்றோர் இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதுடன், மாணவனின் கடிதத்தினை கொண்டு வவுனியா தலைமை பொலிஸ் நிலையம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றில் முறைப்பாடுகளையும் பதிவு செய்துள்ளனர்.
இதேவளை, குறித்த ஆசிரியரால் ஏற்கனவே ஒரு மாணவன் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பெற்றோர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
