யாழில் மாணவியை தகாதமுறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது
யாழ்ப்பாணம் (Jaffna) - கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவியை தகாதமுறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (23) கோப்பாய் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, கோப்பாய் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் 52 வயதுடைய ஆசிரியரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 17 ஆம் திகதி, 13 வயதுடைய குறித்த மாணவியை அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் தகாதமுறைக்கு உட்படுத்தியதாக நேற்றையதினம் (22) கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரான ஆசிரியரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் வசூல் விவரம்.. 23 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் Cineulagam