யாழில் இடம்பெற்ற கோர விபத்து : படுகாயமடைந்தவர் உயிரிழப்பு
புதிய இணைப்பு
யாழ் ஆவரங்கால் பகுதியில் நேற்று (22.01.2025) மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த உதயநாதன் விதுசன் (வயது 32) சிகிச்சை பலனின்றி யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், ஆவரங்கால் பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்காக கூட்டிச் சென்ற குறித்த இளைஞன் மீது மோதியே விபத்து இடம்பெற்றது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், ஆவரங்கால் பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்காக கூட்டிச் சென்ற இளைஞன் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் அதிக வேகம்
இந்த சம்பவத்தில் மாடுகளை மேய்ச்சலுக்காக கூட்டிச் சென்ற இளைஞன் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையிலும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையிலும், அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் அச்சுவேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த உதயகுமார் விதுஷன் (வயது 32) என்ற மாடுகளைக் கூட்டிச் சென்ற இளைஞனும், தனியார் காப்பீடு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நெல்லியடி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த தேவமனோகரன் பிரணவன் (வயது 23) என்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் அதிக வேகமே இந்த விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான விரிவான விசாரணைகளை அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இரு இளைஞர்களும் தற்போது உயிருக்கு போராடி வருவதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
