தேடப்பட்டு வந்த டீச்சர் அம்மாவுக்கு பிணை அனுமதி
தரம் 5 புலமைப்பரிசில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பிரத்யேக வகுப்புகளை நடத்தும், 'டீச்சர் அம்மா' என்று அழைக்கப்படும் ஆசிரியையான ஹைசிகா பெர்னாண்டோ இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்யார்.
2025, மே 10 ஆம் திகதியன்று, இளைஞன் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் ஹைசிகா பெர்னாண்டோவை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
குறித்த ஆசிரியையின் தாக்குலால், பாதிக்கப்பட்ட இளைஞர், சிகிச்சைக்காக நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
பிணை அனுமதி
சம்பவத்தைத் தொடர்ந்து, ஹைசிகா பெர்னாண்டோ அந்தப் பகுதியை விட்டு தலைமறைவாகி, தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வந்தார்.
அதே நேரத்தில் அவரது கணவரும் அவரது மேலாளரும் கட்டான பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரும் நேற்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, ஹைசிகா பெர்னாண்டோவும் ஒரு சட்டத்தரணியின் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
இந்தநிலையில் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த ஹைசிக்காவின் கணவர் மேலாளர் மற்றும் ஹைசிகா ஆகியோருக்கு பிணை அனுமதிக்கப்பட்டது.
இதற்கிடையில், தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இளைஞனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், சந்தேக நபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது, நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் மௌனப் போராட்டத்தை நடத்தினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
