எரிபொருளுக்கு பதிலாக தேயிலை:ஈரானுடன் உடன்படிக்கை
இலங்கை கச்சாய் எண்ணெய் இறக்குமதிக்காக செலுத்த வேண்டிய 251 மில்லியன் டொலர் பணத்தை ஈடுசெய்யும் வகையில், ஈரான் இலங்கையுடன் தேயிலை ஏற்றுமதி உடன்படிக்கை ஒன்றுக்கு வந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒன்று வருடங்களுக்கு முன்னர் இறக்குமதி செய்த கச்சாய் எண்ணெய்க்காக இந்த கடனை செலுத்த வேண்டியிருந்தது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்க பொருளாதார தடைகளை விதித்ததன் காரணமாக ஏற்பட்டுள்ள தொழிற்நுட்ப பிரச்சினைகளால், இரு நாடுகளும் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக ஈரானின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சு ஊடகங்களிடம் கூறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் பொருளாதார தடைகள் காரணமாக ஈரான் வங்கிகளுடன் கொடுக்கல், வாங்கலில் ஈடுபட ஏனைய நாடுகளில் வங்கிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஈரானுக்கு சொந்தமாக 5 பில்லியன் டொலர்கள் பிரித்தானியா மற்றும் அமெரிக்க வங்கிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
ஈரான் மக்கள் அதிகமாக விருப்பும் பானமான தேனீருக்கான தேயிலையில் 50 வீதமான தொகையை இலங்கையே ஈரானுக்கு ஏற்றுமதி செய்கிறது.
மேற்படி உடன்படிக்கையின் மூலம் ஈரான், இலங்கைக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய டொலர்கள் தேவையில்லை.
இந்த புதிய உடன்படிக்கையின் மூலம் அமெரிக்காவின் பொருளாதார தடையை தவிர்த்து, எரிபொருளை தவிர்த்து ஏனைய அத்தியவசிய உணவுப் பொருட்களை ஈரானுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.
மேலும் இரு நாடுகளுக்கு இடையிலான இந்த கொடுக்கல் வாங்கலில் வங்கிகளின் தலையீடு இருக்காது எனவும் ஈரானின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஈரானின் அணுவாயுத நெருக்கடியை தொடர்பில் சமரசம் செய்யும் வகையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் அடிப்படை நிபந்தனையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பணத்தை விடுவிக்க வேண்டும் என ஈரான், அமெரிக்காவிடம் கோரியது.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகமும் இதற்கு அங்கீகாரத்தை வழங்கியிருந்தார்.
எனினும் அமெரிக்காவிடம் இருந்து இதுவரை சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கிய இந்திய விமானப்படை: BrahMos பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு News Lankasri
