தேனீரை 5 ரூபாவுக்கும் அப்பம் மற்றும் உளுந்து வடை 10 ரூபாவுக்கும் விற்பனை செய்யும் உணவகம்!
நாட்டில் உணவு பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலைமையில், உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகள் மற்றும் தேனீர் என்பவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன.
இவ்வாறான நிலையில், தேனீரை 5 ரூபாவுக்கும் அப்பத்தை 10 ரூபாவுக்கும் உளுந்து வடையை 10 ரூபாவுக்கு விற்பனை செய்யும் சிறிய உணவகம் ஒன்று அனுராதபுரம் பதவிய பிரதேசத்தில் இயங்கி வருகிறது. பதவிய வைத்தியசாலைக்கு அருகில் இந்த உணவகம் இயங்கி வருகிறது.
குறைந்த விலையில் உணவுகளை விற்பனை செய்வதால், வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளின் பெரும்பாலானவர்களின் வரவேற்பை பெற்று இந்த உணவகம் இயங்கி வருகிறது. ஷாந்த தேனீர் கடை என்பது இந்த உணவகத்தின் பெயர்.
25 வருடங்களுக்கு மேலாக ஷாந்த என அழைக்கப்படும் காமினி சரத் குமார என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை இந்த உணவகத்தை நடத்தி வருகிறார். அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் இந்த உணவகம், அனைத்து உணவுகளும் தீர்ந்த பின்னர் இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.
பருப்பு மற்றும் உளுந்து வடை 10 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்டிஸ் , ரோல்ஸ் 30 ரூபாய், அப்பம் 10 ரூபாய். இடியப்பம் 10 ரூபாய், 10 இடியப்பங்கள் தேங்காய் சம்பலுடன் 40 ரூபாய், லெவரியா 20 ரூபாய், பேன் கேக் 15 ரூபாய் போன்ற விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக காமினி குமார தெரிவித்துள்ளார்.
தினமும் 150 பெட்டிஸ், ரோல்ஸ், 250 இடியப்பம், 200 முதல் 300 அப்பங்கள் விற்பனையாவதாக அவர் கூறியுள்ளார்.
உணவை விற்பனை செய்து கிடைக்கும் சிறிதளவு பணத்தில் நாங்கள் வாழ்க்கை நடத்துகிறோம். பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை எனவும் காமினி சரத் குமார குறிப்பிட்டுள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
