வரி அடையாள எண் பெறுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
வரி செலுத்துவோர் அடையாள எண்(TIN) பெற்றவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தின் சிரேஷ்ட ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
10 இலட்சமாக உயர்ந்த பதிவு எண்ணிக்கை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனவரி 1ஆம் திகதி எமது திணைக்களத்தில் 437,547 பேர் பதிவு செய்திருந்தனர். இன்று அது 10 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.டிவருமான ஏற்றத்தாழ்வையே பிரதானமாக இலக்காகக் கொண்டுள்ளோம்.
இந்த வருமானப் பங்கீட்டைப் பார்த்தால் அதிக வருமானம் கொண்ட குழு சுமார் 20% உள்ளது. அந்த குழுவில், மொத்த வருமானத்தில் 60% அதிகமாக பகிரப்பட்டுள்ளது.
20 சதவிகிதம் என்று சொன்னால் சுமார் 50 லட்சம் பேர் என்று அர்த்தம். அப்படியானால் இந்த 50 லட்சம் பேரை அடையாளம் காண்பதுதான் எங்களின் முதல் இலக்கு. ஏனென்றால் அவர்கள்தான் உண்மையான வரி வருமானத்தைப் பெறும் திறன் கொண்டவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
கல்விப் பொதுத் தராதர பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவுகள்: ஜனாதிபதி நடவடிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |