அரச ஊழியர்களுக்கு சஜித் வெளியிட்டுள்ள அறிவிப்பு
நாட்டின் மொத்த சனத்தொகையில் பாதியளவு மக்கள் கடுமையான வறுமை மற்றும் கடும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தநிலையில் இந்த அவலத்தில் இருந்து முழு நாட்டையும் விடுவிக்கும் மனிதாபிமானப் பணியை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்களை நாட்டிற்கு சுமையாக கருதி வருகிறது. சந்தர்ப்பவாதத்தின் காரணமாக திடீரென அரச ஊழியர்களை ஏமாற்றி அதிகாரத்தை தக்கவைக்க முயல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொய்யான வாக்குறுதிகள்
ஒரு காலத்தில் அரச சேவையை நாட்டிற்கு சுமை என்று முத்திரை குத்தியவர்கள் தற்போது மோசடியான வாக்குறுதி திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி,பொய்யான வாக்குறுதிகளை வழங்காது அதற்கு பதிலாக உறுதியான திட்டத்தை முன்வைக்கிறது என்று சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தமது ஆட்சியில் அரச ஊழியர்களின் சம்பளத்தை வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப திருத்துவதற்காக விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு, இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும்.
அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம்
2025 ஜனவரி முதல், அனைத்து அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 24 வீதத்தினால் அதிகரிக்கப்படும் என்றும், தற்போதைய குறைந்தபட்ச வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவான 17,800 ரூபா 25,000 ஆக உயர்த்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் அனைத்து அரச ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 57,500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய வரிக் கொள்கைகள் அரச ஊழியர்கள் உட்பட தொழிலாளர் வர்க்கத்தை கணிசமான அளவில் பாதித்துள்ளன.
தற்போது சம்பளத்தில் செலுத்தும் வரிகள் 6 வீதம் முதல் 36வீதம் வரை உள்ளன. தமது ஆட்சியில் இந்த வரிகள் ஒரு வீதம் முதல் 24வீதம் வரை குறைக்கப்படும் என்றும் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

விண்வெளியில் இருந்து கூட அமெரிக்காவை தாக்க முடியாது - கோல்டன் டோமை அறிமுகம் செய்த டிரம்ப் News Lankasri

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
