ஜனாதிபதி கூறும் கோடிக்கணக்கான ரூபாய்..! நாமல் வெளியிட்ட தகவல்
கோடிக்கணக்கான ரூபாய் இருப்பதாக ஜனாதிபதி கூறிவரும் நிலையில் மக்கள் செலுத்தும் வரிகள் நியாயமானதாக இல்லை என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கூட்டமொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமாகும் தேவேந்திரமுனை பெரஹர - குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகள்
மின்சார கட்டணங்கள் உயர்வு
ஜனாதிபதி 'எங்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் இருக்கிறது என்று பெருமையுடன் கூறுகின்றார். ஆனால், செலுத்தப்பட்ட வரிகள் நாட்டில் நியாயமான முறையில் முதலீடு செய்யப்படவில்லை. இது ஒரு கடினமான காலம். பெரும் பொருளாதார நெருக்கடி நிலவும் காலம். வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருகிறது.

அரசாங்கம் தன் விருப்பப்படி வரிகளை உயர்த்துகிறது. அரசாங்கத்தில் ஏதேனும் திருட்டு நடந்தால், அந்த திருட்டின் இழப்பை ஈடுகட்ட மக்கள் மீது வரி விதிக்கப்படுகிறது.
கடந்த காலத்தில், தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. அந்த இழப்பை ஈடுகட்ட மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன என்றும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.