ராஜபக்சக்களின் ஆலோசனைக்கு ஏற்ப வரிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுகின்றது
ராஜபக்சக்களின் ஆலோசனைக்கு ஏற்ற வகையில் ஜனாதிபதி புதிய வரிக்கொள்கையை அமுல்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
புதிய வரிக் கொள்கையினால் நடுத்தர வர்க்க மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு 50000 ரூபாவிற்கும் வரி அதிகரிப்பு
நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி வர்த்தமானியில் கையொப்பமிட்ட போதிலும் இந்த யோசனை ராஜபக்ச தரப்பினது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரையில் ஒரு வரி, ஒக்ரோபர் 1ம் புதிய வரி பின்னர் ஒக்ரோபர் 12ம் திகதி மற்றுமொரு புதிய வரி ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
ஒவ்வொரு 50000 ரூபாவிற்கும் 6, 12, 18, 24, 30 மற்றும் 36 வீதங்களில் வரி அதிகரிக்கப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரி அதிகரிப்பு குறித்து அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடாத்தியிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.