அடுக்கு மாடி குடியிருப்புகளில் வாழ்வோருக்கு முக்கிய தகவல்-செய்திகளின் தொகுப்பு
நாட்டில் உள்ள முக்கிய அடுக்குமாடி வீட்டுத் தொகுதிகளில் வீடுகளை வாங்கிய நுகர்வோரிடம் இருந்து வருமான வரி வசூலிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்த தீர்மானத்தின் பிரகாரம், வீடுகளை வாங்கியவர்கள் மற்றும் அவர்களது குடியிருப்பாளர்கள் பற்றிய தகவல்களை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வழங்குமாறு வீட்டுத் தொகுதி நிர்வாக நிறுவனங்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் டபிள்யூ.என்.ஏ.விஜேசூரிய குறிப்பிடுகிறார்.
அத்துடன், உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் பிரிவு இலக்கம் 123 (1)இன் பிரகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த எழுத்துமூலக் கோரிக்கை உரிய நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என உள்நாட்டு இறைவரி ஆணையாளரின் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)