இரவில் சூறையாடப்படும் பொதுமக்களின் வரி: வெளியான குற்றச்சாட்டு
பொதுமக்களிடமிருந்து பகலில் அதிக வரியை அறவிட்டு அவற்றை இரவில் சூறையாடுகின்றனர் என பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற ஜீ.எல் பீரிஸ், பொதுமக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
“பெரும் பணம் பலம் படைத்தவர்களிடம் 15 20 வருடங்களுக்கு மேலாக எந்தவிதமான வரிகளையும் அறவிடப்படாது வாழ்ந்து வருகின்றனர். இந்த நாட்டில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொறிமுறைகளோ அல்லது சட்டமோ கிடையாது.
நல்ல தலைமைத்துவம்
எங்களுடைய வாழ்க்கை செலவை ஈடு செய்ய முடியாத அளவுக்கு வரியும் வாழ்க்கைச் செலவும் அதிகரித்துள்ளது. பகலில் பெரிய அளவில் பொதுமக்களிடமிருந்து வரிகளை அறவிட்டு அதனை இரவிலே கொள்ளை இட்டுச் செல்கின்றார்கள்.
இவை எல்லாவற்றுக்கும் ஏற்ற ஒரு பொறிமுறையை உருவாக்கக்கூடிய நல்ல ஒரு தலைமைத்துவமாக சஜித் பிரேமதாச காணப்படுகின்றார்.
எனவே, அவருக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்வதன் மூலம் நாட்டை ஒரு நல்ல நிலையில் முன்னேற்ற முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஐக்கிய மக்கள் சக்தியின் உடைய வடக்கு மாகாணத்துக்கான இணைப்பாளர் உமாச்சந்திர பிரகாஷ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஆன மேரியசீலன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேஷ் சந்திரகுமார் மற்றும் கட்சியின் தலைவர் சுப்பையா மனோகரன் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam
