ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகத்தினரின் ஆதரவு: கருத்துக்கணிப்பில் தகவல்
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு சிறுபான்மைச் சமூகத்தினர் மத்தியில் அதிகளவு ஆதரவு உள்ளதாக சஜித்தின் ஆதரவு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
சுகாதார கொள்கைகள் நிறுவகம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இளைஞர்கள் மத்தியில் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அதிகளவு ஆதரவு காணப்படுகின்றது. கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 53 வீதமானவர்கள் அநுரகுமாரவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
அநுரகுமார திஸாநாயக்க
இதேவேளை, நாடளாவிய ரீதியில் இலங்கைத் தமிழர்களில் 55 வீதமானவர்களும், இந்திய வம்சாவளித் தமிழர்களில் 53 வீதமானவர்களும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, முஸ்லிம்களில் 71 வீதமானவர்கள் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர். 60 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்களில் 43 வீதமானவர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
வடக்கு, கிழக்கு தவிர ஏனைய மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் காணப்படுகின்றார்.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
