வற் வரி திட்டத்தினால் நாட்டின் கடன் சுமையில் மாற்றம் ஏற்படும்: வேலாயுதம் ருத்ரதீபன்
கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டிருந்த போது பல நாடுகள் கடன் உதவி செய்தன. இந்த கடன் சுமையை நிவர்த்தி செய்ய வற் வரி திட்டமானது உதவி செய்யும் என ஜனாதிபதி தொழிற்சங்க பிரிவின் பணிப்பாளர் நாயகத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார தேசிய நிறுவன இயக்குனர் வேலாயுதம் ருத்ரதீபன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக ஒவ்வொரு நாடும் தன்னுடைய அரசாங்கத்தை நடத்தி செல்வதற்கு மக்களிடம் வரியை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலமை இருக்கின்றது.
வரி என்பது அந்த நாட்டிற்கு முதுகெலும்பாக இருக்கிறது. நாம் வரி செலுத்துவதனூடாக நாட்டின் அபிவிருத்தியில் பாரிய பங்களிப்பை வழங்குகிறோம்.
இந்த வரித் திட்டத்தினூடாக எதிர்காலத்தில் சிறந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் வரியானது குறைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |