பெப்ரவரி 1ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் வரி அடையாள இலக்கம்
பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் கட்டட திட்டங்களுக்கு ஒப்புதல் கோரும் போதும், வாகனம் பதிவு செய்யும் போதும், போக்குவரத்து வருவாய் உரிமம் புதுப்பிக்கும் போதும், நில உரிமை பதிவு செய்யும் போதும் வரி அடையாள இலக்கம் கட்டாயமாக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வரி அடையாள இலக்கம் பெறப்பட்டிருப்பின் வரி செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வருடாந்த வரி விலக்கு வரம்பான 12 இலட்சம் ரூபாவிற்கு மேல் வருமானம் ஈட்டும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டியவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
வரி அடையாள அட்டை பதிவு
இருப்பினும் "வரி அடையாள அட்டை பதிவு செய்வது கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒருவரது ஆண்டு வருமானம் 12 இலட்சத்துக்கு மேல் இருந்தால், அவர் அல்லது அந்த அமைப்பு வரி செலுத்த வேண்டும். அவர்கள் நேரடியாக வரி செலுத்துபவராக மாற்றப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri
