புதிய வாகனம் வாங்கும் மக்களின் கனவை அரசாங்கம் கொன்று விட்டது- தயாசிறி ஆதங்கம்

Government Of Sri Lanka Dayasiri Jayasekara vehicle imports sri lanka
By Amal Jan 14, 2025 03:15 AM GMT
Report

அரசாங்கம் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது, ஆனால் நான்கு அடுக்கு வரி விதிப்பு மற்றும் ஜனாதிபதியால் குறிப்பிடப்பட்ட உற்பத்தி ஆண்டுக்கான  குறைப்பு ஆகியவை புதிய வாகனங்களை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நம்பிக்கையை தகர்த்துவிட்டன என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கூறியுள்ளார்.

ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், வாகனங்களை கொள்வனவு செய்ய காத்திருந்த பலருக்கு இது, தொலைதூரக் கனவாக மாற்றியுள்ளது என்று கூறியுள்ளார்.

தமிழர் பகுதியில் குடிப்பரம்பலை மாற்ற முயற்சி! சாணக்கியன் முன்வைத்துள்ள புதிய திட்டம்

தமிழர் பகுதியில் குடிப்பரம்பலை மாற்ற முயற்சி! சாணக்கியன் முன்வைத்துள்ள புதிய திட்டம்

தற்போதைய அரசாங்கம் தேர்தல்களின் போது இளைஞர்கள் உட்பட பொது மக்களுக்கு, குறைந்தபட்சம் ஒரு புத்தம் புதிய ஜப்பானிய மோட்டார் சைக்கிள் மற்றும் புதிய வாகனங்களை வாங்குவதற்கான சூழலை எளிதாக்குவது போன்ற பெரும் வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதி 

குறைந்த விலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதாக ஜனாதிபதியும் உறுதியளித்திருந்தார். இருப்பினும், அரசாங்கம் இறக்குமதிகளைத் தளர்த்தியுள்ளது.

புதிய வாகனம் வாங்கும் மக்களின் கனவை அரசாங்கம் கொன்று விட்டது- தயாசிறி ஆதங்கம் | Tax Hikes Killed Hopes For New Vehicle

ஆனால் தளர்வுகள் உருவாக்கப்பட்டு எந்த வகையான வாகனத்தையும் இறக்குமதி செய்ய முடியாதபடி சட்டங்கள் விதிக்கப்பட்டன. வாகன இறக்குமதிகளுக்கு நான்கு அடுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது,

இதில் வாகனத்தின் மதிப்பு, ஆடம்பர வரி, சுங்க வரி மற்றும் செலவு, காப்பீடு மற்றும் சரக்கு ஆகியவற்றின் அடிப்படையில் சிறப்பு இறக்குமதி வரி, தற்போதுள்ள 18வீத வெட் ஆகியவை அடங்கும்.

இதன் விளைவாக, வாகனங்கள் மீதான ஒட்டுமொத்த இறக்குமதி வரி கணிசமாக அதிகரித்துள்ளது.

உற்பத்தி ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த போதிலும், உற்பத்தி திகதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்களுக்கு இறக்குமதியை அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளது என்று ஜயசேகர கூறியுள்ளார்.

இதில் துரதிஸ்டவசமான சூழ்நிலை என்னவென்றால், ஜப்பான் தங்கள் நாட்டில் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகளுக்கு தங்கள் வாகனங்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

அதிக சம்பளம் பெறும் துறைகளுக்குள் உள்ளடக்கப்படவுள்ள முக்கிய கல்வி சேவைகள்

அதிக சம்பளம் பெறும் துறைகளுக்குள் உள்ளடக்கப்படவுள்ள முக்கிய கல்வி சேவைகள்

இந்த முடிவின் காரணமாக, உற்பத்தி திகதியில் இருந்து ஏழு ஆண்டுகளுக்கும் குறைவான பழைய வாகனங்களை ஜப்பானில் இருந்து கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலைக்கு ஏற்படும். எனவே, வாகன இறக்குமதி தொடர்பான முடிவு, முழுமையான பொய்யாக மாறியுள்ளது.

உற்பத்தி

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வயதை உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளாக நீடிக்க ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தாலும், அரச அதிகாரிகள் அவரது உத்தரவைப் பின்பற்றாமல் அதை அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளாக அதனை குறைத்துள்ளனர் என்று தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

புதிய வாகனம் வாங்கும் மக்களின் கனவை அரசாங்கம் கொன்று விட்டது- தயாசிறி ஆதங்கம் | Tax Hikes Killed Hopes For New Vehicle

இதன்படி, உண்மையில், உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குக் குறைவான வாகனத்தை இறக்குமதி செய்வது மிகவும் அரிதான கஸ்டமானது.

அத்தகைய வாகனம் கண்டுபிடிக்கப்பட்டு நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டாலும், அதன் விலை 8 மில்லியன் ரூபாய் வரை உயரக்கூடும்.

இது வாகனங்களை வாங்குபவர்களுக்கு குறிப்பிடத்தக்க நிதிச் சுமையை உருவாக்கும் என்று ஜயசேகர தெரிவித்துள்ளார். எனவே புதிய வாகனம் வாங்கும் மக்களின் கனவை அரசாங்கம் கொன்றுவிட்டது என்று அவர் மேலும் கூறியுள்ளார். 

மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US