வரியில்லா வாகன அனுமதிகள் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையின் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட வரியில்லா வாகன அனுமதிகள், 2026 வரவு செலவு திட்டத்தில் மீண்டும் வழங்கப்பட வாய்ப்பில்லை தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச நாணய நிதியம், நிர்ணயித்த இலக்கான - ஆண்டு இறுதிக்குள் 7 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு இருப்பு இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இது அமையலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
வரவு செலவு திட்டம்
எனவே, இந்த வசதியை நிறுத்தி வைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக, கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே மருத்துவர்கள் உட்பட்ட சுமார் 23,000 அதிகாரிகளுக்கான அனுமதிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் மேலும் அதிகாரிகள் இந்த வசதிக்கு தகுதிக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
2026, வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்ய சுமார் ஒரு மாதம் மீதமுள்ள நிலையில், வரியில்லா வாகன அனுமதிகளை வழங்கும் முறையை மீண்டும் தொடங்குவது குறித்து எந்த பரிசீலிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்று திறைசேரி தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாகன இறக்குமதிகள் தொடர்ந்து உயர்ந்து வருக்கின்றன. அதன்படி, வாகன இறக்குமதி காரணமாக மொத்த அந்நிய செலாவணி வெளியேற்றம் முதல் எட்டு மாதங்களில் 918 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஒகஸ்ட் மாதத்தில் மட்டும் அதிகபட்ச மாதாந்த வாகன இறக்குமதி 249 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 7 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri
