நீருக்கு வரி அறவிடப்படுமா..! அரசாங்க தரப்பின் தகவல்
விவசாயிகளிடத்திலிருந்து நீருக்கு ஒரு சதமேனும் வரி அறவிடப் போவதில்லை என நீர்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
அத்துடன் நீருக்கு வரி அறவிடப்படப்போவதாக கூறுவது அரசியல் கட்சிகளின் போலி பிரசாரம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அநுராதபுரத்தில் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
வர்த்தமானி அறிவித்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில், விவசாயிகளிடத்திலிருந்து நீருக்கு ஒரு சதமேனும் வரி அறவிடப் போவதில்லை. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக சிலர் குறிப்பிடுகின்றனர்.
அவ்வாறான எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. சட்ட ரீதியாக நீர் கொள்கையொன்றை ஏற்படுத்துவதற்கான அறிக்கையொன்றே வெளியிடப்பட்டுள்ளது.
அதனை தவிர்த்து இதற்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டு விவசாயிகளிடமிருந்து நீருக்கு வரி அறிவிட ஒருபோதும் தீர்மானிக்கவில்லை.
இது அரசியல் கட்சிகளின் போலிப் பிரசாரமாகும். ஒருபோதும் நாம் விவசாயிகளிடமிருந்து நீர் அல்லது வேறு எதற்கும் வரி அறிவிடமாட்டோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |