இலக்கு வைக்கப்பட்ட ஈரானிய தளபதிகள் : பிரித்தானியா விதித்துள்ள தடை
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு காரணமான ஈரானிய தளபதிகளுக்கு குறிவைத்துள்ளதாக பிரித்தானியா மற்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிரான ஈரானிய நிர்வாகத்தின் தாக்குதல் என்பது ஒரு பொறுப்பற்ற செயல் மற்றும் ஆபத்தான நடவடிக்கை என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்(Rishi Sunak) தெரிவித்துள்ளார்.
மேலும், தாக்குதலுக்கு காரணமான ஈரானிய இராணுவம் மற்றும் படைகளின் தலைவர்கள் மீது தடை விதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீது 400 தடைகள்
இந்நிலையில் அமெரிக்கா தரப்பில் 16 இராணுவ அதிகாரிகள் மீதும் 2 நிறுவனங்கள் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த இரு நிறுவனங்களும் இஸ்ரேல் மீதான ட்ரோன் தாக்குதலுக்கு உதவியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
தனிப்பட்ட 7 பேர்கள் மற்றும் 6 நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்படலாம் என்றும், இவர்கள் ஈரானுக்கு உதவியதாகவும் பிரித்தானியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் வெளியிடப்படும் நபர்களின் சொத்துக்கள் முடக்கப்படுவதுடன், பயணத் தடையும் விதிக்கப்படுவதுடன் அந்த நிறுவனங்களின் சொத்துக்களும் முடக்கப்படும். ஏற்கனவே புரட்சிகர படை உட்பட ஈரான் மீது 400 தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது, கடந்த வார ஈரானின் நடவடிக்கைக்கு எதிராக பிரித்தானியாவும் அமெரிக்காவும் இணைந்து நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. தற்போதைய தடையானது புரட்சிகர படை மற்றும் ஈரானிய இராணுவ தலைமையகத்திற்கும் பொருந்தும் என்றும் பிரித்தானியா அறிவித்துள்ளது.
அத்துடன் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் முகமது ரேசா, ஈரானின் மத்திய இராணுவ தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் கோலமாலி ரஷீத் ஆகியோர் மீதும் பிரித்தானியா தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan
