தான்சானியாவில் மீண்டும் பதவிக்கு வரும் பெண் ஜனாதிபதி
தான்சானியாவின் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹாசன் மீண்டும் ஒரு முறை வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் காரணமாக நாடு முழுவதும் பல நாட்கள் அமைதியின்மை நிலவிய நிலையில், மீண்டும் அவரின் பதவிக்காலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையகத்தின் கூற்றுப்படி, சாமியா 98 வீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.
எனினும், இந்தத் தேர்தலில் வெளிப்படைத்தன்மை இல்லாமை காரணமாக, நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இறப்புக்களின் எண்ணிக்கை
நாடு தழுவிய இணைய முடக்கம் காரணமாக, இறப்புக்களின் எண்ணிக்கையை சரியாக கணிப்பிட முடியவில்லை.

எனினும் தேர்தல் வன்முறைகளில் சுமார் 700 பேர் வரை பலியாகியிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |