மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரருக்கு மாரடைப்பு
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தமீம் இக்பால்(Tamim Iqbal), மாரடைப்பினால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டாக்கா பிரிமியர் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில் மைதானத்தில் இருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மொகமதான் ஸ்போர்டிங் கிளப் மற்றும் ஷைன்புகுர் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதிய போட்டியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உடல்நலக் குறைவு
மொகமதான் அணியின் தலைவராக இருந்த தமீம், முதலில் ஒரு ஓவர் மட்டுமே களத்தில் இருந்தார். இதன் பின்னர் அவர் உடல்நலக் குறைவு காரணமாக மைதானத்தைக் விட்டுச் சென்று மருத்துவமனைக்கு சென்றார்.
முதலில் அவர் கே.பீ.ஜே. KPJ ஸ்பெஷலைஸ்ட் வைத்தியசாலை மருத்துவர்களை சந்தித்தபோது, அவருக்கு மேலும் சோதனைகள் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் அவர் உலங்கு வானூர்தி மூலம் மற்றொரு மருத்துவமனைக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் நிலைமை மோசமானதால், மீண்டும் அதே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
துரிதமாக சிகிச்சை
மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், அவரின் இருதய வழிகளில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து உடனடியாக ஆன்ஜியோபிளாஸ்டி மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
"தமீம் மீண்டும் எங்களிடம் மிகவும் கடுமையான நிலைமையில் வந்தார். இதை நாங்கள் மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்) எனக் கருதலாம். உடனடியாக ஆன்ஜியோபிளாஸ்டி செய்யப்பட்டது.
அவர் தற்போது கண்காணிப்பில் உள்ளார். மருத்துவ பணியாளர்களின் விரைவான நடவடிக்கையால், தமீம் துரிதமாக சிகிச்சை பெற்றார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்குப் பின்னர், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) அவசரக் கூட்டத்தை ரத்து செய்தது. BCB தலைவர் பரூக் அகமது உட்பட பலர் மருத்துவமனையில் தமீமை பார்வையிட்டுள்ளனர்.
You May Like This
