தமிழர்களுக்கு இலங்கையில் நீதி கிட்ட போவதில்லை: அருட்தந்தை மா.சத்திவேல் விசனம்

Sri Lankan Tamils Sri Lanka Eastern Province Northern Province of Sri Lanka
By Shan Nov 06, 2023 01:50 PM GMT
Report

அகிம்சைக்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பு தெரியாத நாட்டில் தமிழர்களுக்கு நீதி கிட்ட போவதில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

இன்று (06.11.2023) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் குறித்த அறிக்கையில், மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களின் அகிம்சை வழியிலான நீதிக்கான போராட்டத்திற்கு ஜனாதிபதி தலையிட்டு, இறுதியாக நடந்த கலந்துரையாடலின் பின்பும் தீர்வு கிட்டாத நிலையில், பண்ணையாளர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

திருகோணமலையில் தடை உத்தரவை மீறி புத்தர் சிலைகள் அமைப்பு: மக்கள் பலத்த எதிர்ப்பு

திருகோணமலையில் தடை உத்தரவை மீறி புத்தர் சிலைகள் அமைப்பு: மக்கள் பலத்த எதிர்ப்பு

பல்கலைக்கழக மாணவர்கள் 

இதற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு மட்டங்களிலும் குரல் எழுப்பிவரும் சூழ்நிலையில் வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05.11.2023) ஜனநாயக வழியில் பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், அரசுக்கு தமது எதிர்ப்பினை வெளியிட்டும் மீள திரும்புகையில், அம் மாணவர்களில் அறுவர் அநியாய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழர்களுக்கு இலங்கையில் நீதி கிட்ட போவதில்லை: அருட்தந்தை மா.சத்திவேல் விசனம் | Tamils Will Not Get Justice In Sri Lanka Sakthivel

இது இனரீதியில் பொலிஸார் நடத்திய அராஜகமே. அகிம்சைக்கும், ஜனநாயகத்திற்கும் மதிப்பு தெரியாத நாட்டில் தமிழர்களுக்கு நீதி கிட்ட போவதில்லை என்பதே உண்மை.

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின எனும் இனவாத மதவாத பிக்கு பகிரங்கமாக இனவாதத்தைக் கக்கி, தகாத வார்த்தைகளை உமிழ்த்து, அரசு உத்தியோகத்தர்களை தாக்கி, பொலிஸாரை தாக்கி அராஜகம் புரிவது அனைவருக்கும் தெரிந்தது.  அவரே மக்களை திரட்டி பொலிஸாரின் விதி தடைகளை உடைக்க முற்படுவதும், ஜனாதிபதியை அவதூறாக பேசியதும், அண்மையில் சமூக ஊடகங்களில் காணக்கூடியதாக இருந்தது.

அத்தகைய ஒருவரை பொலிஸார் சாது சாது என காலில் விழுந்து வணங்கிக் கொண்டு, ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மாணவர்களை கைது செய்திருப்பது உரிமை மீறும் செயல் மட்டுமல்ல, அது போராட்டத்தில் ஈடுபடும் தமிழர்களுக்கு எதிரான இனவாத அச்சுறுத்தலுமாகும்.

இனத் துரோகம் 

தமிழ் பண்ணையாளர்கள் மேய்ச்சலுக்கு விடும் கால்நடைகளை தமிழர்களுக்கு சொந்தமானது என்பதற்காகவே வெட்டுவதும், கொலை செய்வதும் இனத் துரோக செயலாகும். ஏழை தமிழர்களின் பொருளாதாரத்துக்கு எதிரான செயலுமாகும். அத்தோடு மிருகவதைக்கு உட்பட்ட தண்டனைக்குரிய குற்றமாகும்.

தமிழர்களுக்கு இலங்கையில் நீதி கிட்ட போவதில்லை: அருட்தந்தை மா.சத்திவேல் விசனம் | Tamils Will Not Get Justice In Sri Lanka Sakthivel

சட்டத்தினை கையில் எடுத்து இத்தகைய கொடிய செயலினை தடுத்து நிறுத்த பொலிஸார் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ் பண்ணையாளர்களின் வாடிகளை எரித்து நாசமாக்கி உள்ளனர். அதற்குரிய விசாரணை இல்லை. காரணம் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் தமிழர்கள் என்பதாகும்.

அவர்களின் பொருளாதாரத்தை அழிக்க வேண்டும், அவர்களின் பொருளாதார நிலத்தை ஆக்கிரமிக்க வேண்டும் எனும் இனவாதமாகும்.  பௌத்த சமயத்தை முன்னிலைப்படுத்தி வடக்கு, கிழக்கின் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் பேரின வாதம் மேலும் தமிழர்களின் பல்லாயிரக்கணக்கான நிலங்களை ஆக்கிரமித்து, ராணுவம் விவசாயம் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. 

அதேபோன்று மயிலத்தமடு மாதவனை தமிழ் பண்ணையார்களின் பொருளாதாரத்தை அழிக்க முற்படுகின்றனர். இது நாட்டின் பொருளாதரத்தை அழிக்கும் செயலாகும்.

தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்காத, தமிழருக்கு எதிராக போர் தொடுத்து நாட்டின் பொருளாதாரத்தை சூறையாடி கடனுக்குள் தள்ளிய இனவாத ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் கவலையற்று; நாட்டின் பொருளாதாரம் அழிந்தாலும் பரவாயில்லை தமிழர்கள் பொருளாதார ரீதியில் முன்னேறி விடக்கூடாது என நினைப்பது தமிழர்களுக்கும் அவர்களின் பொருளாதாரத்துக்கும் எதிரான இன அழிப்பு போரின் மாற்று வடிவமாகும்.

தமிழர்களுக்கு இலங்கையில் நீதி கிட்ட போவதில்லை: அருட்தந்தை மா.சத்திவேல் விசனம் | Tamils Will Not Get Justice In Sri Lanka Sakthivel

வடக்கு, கிழக்குத் தமிழர்களின் மண்மீட்புக்காக போராடி உயிர் தியாகம் ஆனோரை நினைவு கூருவதற்காக அவர்களின் துயிலும் இல்லங்களை ஆயத்தப்படுத்தும் இக்காலகட்டத்தில், துயிலும் இல்லங்களில் இருந்து எழும் அவர்களின் எழுச்சி குரல்களுக்கு செவிமடுப்போம்.

மாவீரர் நடந்து திரிந்த நிலமெங்கும் அவர்களின் உயரிய லட்சியத்தை அடையாளப்படுத்தி அதனை நிறைவேற்றுவதற்கான மாற்று வழியிலான போராட்டத்தினை மாவீரர் வாரத்துக்கு முன்னர் நடத்தி, ஏற்றவுள்ள தியாக சுடர்களை உயிர்புள்ளதாக்க சிவில் சமுகம் முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார். 

கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக வித்தியாசமான ஆட்டமிழப்பு! கடும் கோபத்தில் இலங்கை வீரர் மெத்தியூஸ்(Photos)

கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக வித்தியாசமான ஆட்டமிழப்பு! கடும் கோபத்தில் இலங்கை வீரர் மெத்தியூஸ்(Photos)

ஜனக ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் விடுக்க உதவிய இருவர் கைது

ஜனக ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் விடுக்க உதவிய இருவர் கைது

8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US