தமிழர்கள் நேரடியாக இலக்குவைக்கப்பட்டு இன அழிப்பு செய்யப்பட்டனர்! - சபையில் கடும் கண்டனம்
கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பில் எந்தவொரு சிங்கள தலைவரும் இதுவரை தமிழ் மக்களிடம் மன்னிப்புக்கோரவில்லை. அவ்வாறான சிங்களத் தலைவர்கள் எவரும் இல்லை என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பில் எந்தவொரு சிங்கள தலைவரும் இதுவரை தமிழ் மக்களிடம் மன்னிப்புக்கோரவில்லை. அவ்வாறான சிங்களத் தலைவர்கள் எவரும் இல்லை.
எனினும் இலங்கையில் இடம்பெற்றமை இன அழிப்பு என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவேதான் நீதிகோரி சர்வதேசத்திடம் தமிழர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக இந்த மண்ணில் தமிழர்கள் இன ரீதியாக அழிக்கப்பட்டனர். அவர்களின் நிலங்களில் இருந்து அவர்கள் இடம்பெயர்க்கப்பட்டனர். மீண்டும் அந்த மண்ணிலே அவர்கள் குடியேற்றப்படாது தடுக்கப்பட்டனர். இந்த அரசாங்கம் மட்டுமல்ல யு.என்.பி அரசாங்கம் கூட இதே இன அழிப்பு நடவடிக்கைகளை இந்த மண்ணில் செய்திருந்தனர்.
1977 ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜெயவர்தன தலைமையிலான அரசு பொறுப்பெடுத்த போதும் கூட 83ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் நேரடியாக இலக்குவைக்கப்பட்டு நேரடியான இன அழிப்பு செய்யப்பட்டது.
பொறுப்புள்ள சிங்கள தலைவர்கள் யாராவது ஒருவர், இந்த மண்ணில் உங்களால் நடைபெற்ற அநியாயங்களுக்கும் கொலைகளுக்கும் மன்னிப்புக் கூற தகுதி இருக்கின்றதா? எனவே எமக்கு நீதியும் நியாயமும் வேண்டும் அதுவும் சர்வதேச ரீதியாக அமைய வேண்டும் எனவும் அவர் கூறினார்.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
