தமிழர்களின் பெரும் ஆயுதமான ஜனாதிபதித் தேர்தல்!! விடுதலைப் புலிகள் பயன்படுத்தியது எப்படி?
சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை வெற்றியைத் தீர்மாணிக்கின்ற சக்தி என்பது தமிழ்பேசும் சமூகம் தான்.
சிங்கள மக்களின் தலைவர் யார் என்பதைத் தீர்மானிப்பதற்கு தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பம்தான் சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தல்.
இன்னும் குறிப்பாகக் கூறுவதானால், தனது எதிரியின் தலைவனைத் தெரிவு செய்கின்றதான ஒரு அரிய வாய்ப்பு.
சிறிலங்காவின் தலைவரைத் தெரிவு செய்யும் ஒரு முக்கியமான ஆயுதம் ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை தமிழ் மக்களின் கரங்களுக்கு வந்து செல்கின்றது.
எனவே அந்த ஆயுதத்தை எப்படியாவது தமிழ் மக்கள் பயன்படுத்தியேயாகவேண்டும்.
விடுதலைப் புலிகள் முப்படைகளுடன் பலமான நிலையில் ஒரு இராஜ்யம் அமைத்து இருந்த காலத்திலேயே, சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தல் என்னும் ஆயுதத்தை தமிழ் மக்களின் நன்மை கருதிப் பயன்படுத்திய வரலாறுகள் இருக்கின்றன.
இந்த விடயங்கள் பற்றி மீட்டுப் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: