சுவிட்ஸர்லாந்து புலம்பெயர் வாழ்வில் 40 ஆண்டுகளை கடந்த ஈழத்தமிழர்கள் (Photos)
சுவிட்ஸர்லாந்தில் 1983ம் ஆண்டிலிருந்து புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு நேற்றுமுன்தினம் (03.12.2023) இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடவில் சுவிட்ஸர்லாந்து அரசியல் அதிகாரிகள் மற்றும் சமூகப் பிரதானிகளுடனான முக்கிய விடயங்கள் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
தமிழர்கள் தொடர்பான ஆய்வு
இதன்போது பயிற்சிப்பட்டறைகள், பயிலரங்குகள் இளந்தமிழர்களால் நெறிப்பத்தப்பட்டு வழிநடத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ஆவணப்படுத்தப்பட்டு காப்பகத்தில் பேணப்படும் இந்தத் தகவல்களை ஆர்வமுடைய பிற சுவிஸ் மற்றும் பிறநாட்டு அமைப்பினருக்கும், குறிப்பாக சுவிட்சர்லாந்து நடுவனரசு 15 ஆண்டுகளுக்கு முன்னர் செய்திருந்த தமிழர்கள் தொடர்பான ஆய்வினை மீளத் தொடரவும் ஒப்படைக்கப்பட்டது.
இந்தப் பட்டறையானது சமூக அரசியல் விடயங்களும் உள்ளடக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது.
புலம்பெயர் தமிழர்களது 1983ம் ஆண்டிலிருந்து சேகரிக்கப்பட்ட பொருள்களினது கண்காட்சி மற்றும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் மேல் அமைந்துள்ள தமிழர் களறியின் பகுதியில் 83 இனக்கலவரம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் வழமையாக வைக்கப்பட்டிருக்கும் இனத்தின்தோற்றம், பரவல், ஈழ வரலாறு ஆகியவை மக்கள் பார்வைக்கு திறந்திருந்தது.
இந்த நிகழ்வில் பல்சயை இல்லத்தின் தலைவர் யோகானஸ் மத்திசி, சுவிட்சர்லாந்து நடுவன் அரசின் தலைமைச் செயலக - குடிவரவுத்துறை பதில் தலைவர் றெகுலா மாதெர், முன்னைநாள் சுவிட்சர்லாந்து நடுவனரசின் முன்னைநாள் தலைமைச்செயலகப் பொறுப்பாளர் மாறியோ கற்ரிக்கெர், தமிழ்க் கிறித்த சமாதான சேவையின் முன்னாள் பணிப்பாளர் கூக்கோ லாக்கெர், தமிழ்க் கல்விச்சேவை இணைப்பாளர் கலாநிதி. பார்த்திபன் கந்தசாமி, சைவநெறிக்கூட இணைப்பாளர் சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் ஆகியோர் பேராளர் உரைகளை ஆற்றினர்.
அனைவரது உரையிலும் தமிழர்களின் புலம்பெயர்வு, சுவிசில் சுழியத்தில் தொடங்கிய தமிழர்வாழ்வு, தமிழர்கள் சுவிசில் கடந்து வந்த கடினமான பாதை, வாழ்வியல், பிரிவின் வலி, சுவிசின் அகதிகள் சட்டம் - முரண் என்பது பேசுபொருளாக அமைந்திருந்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |