அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 46 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அண்மையில், இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் பயணித்து அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட குறித்த இலங்கையர்கள், அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மீள் வருகை
நாடு கடத்தப்பட்ட அவர்கள், அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம், இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
சிலாபத்தை சேர்ந்த குறித்த நபர்கள், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, அவர்களை விசாரணைக்கு உட்படுத்தி, நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
