இலங்கை அரசால் தொடர்ந்து குறி வைக்கப்படும் தமிழர்கள்! PTA திருத்தமும் ஏமாற்றமா?
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இடம்பெறும் கைதுகள் குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், கைதுகள் நிறுத்தப்படுவதாக இல்லை.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புகைப்படங்களை தனது கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த காரணத்திற்காக கிளிநொச்சியில் 21 வயது இளைஞர் ஒருவர் ஜுலை 8ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் தகவல்களையும் செய்திகளையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட இளைஞர் ஒருவர் திருகோணமலையில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறான கைதுகள் தொடர்கின்ற நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மாத்திரம் 100ற்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில், சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடைச் சட்டம் ஒரு கடுமையான சட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இது தன்னிச்சையான கைதுகளுக்கு பயன்படுத்தப்படடுவதாக தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.
எனினும் கைதுகள் இன்றளவிலும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
இது தொடர்பான விரிவான விபரங்களுடன் வருகின்றது “த ரிப்போர்ட்” விசேட தொகுப்பு,

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
