கனடாவில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபி அமைப்பதற்கான மெய்நிகர் நிகழ்வு
கனடாவின் பிராம்டன் நகர் வாழ் தமிழ் சமூகத்தின் வேண்டுகோளுக்கிணங்க பிராம்டன் நகரசபையினால் நகரசபையின் பிரதான பூங்காவில் 'தமிழினப்படுகொலை நினைவுத்தூபி' அமைப்பதற்கு அனுமதி வழங்கும் தீர்மானம் கடந்த வருடம் ஜனவரி 20ஆம் நாள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
உலகளாவிய தமிழ் மக்கள் அனைவரும் இணைந்து முதல் முறையாக புலம்பெயர் தேசமொன்றில் முன்னெடுக்கும் இந்த தமிழினப்படுகொல நினைவுத்தூபி கட்டுமான வேலைகளை துரிதப்படுத்துவதற்கு உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் ஆர்வலர்கள் தம்மாலான பேருதவிகளை வழங்கி வருகிறார்கள்.
கனடாவின் அரசியல் பிரமுகர்களும் கட்சி பேதமின்றி தமது ஆதரவினைத் தெரிவித்து வருகிறார்கள். நாம் உருவாக்கும் நினைவுத்தூபி, கனடாவின் ஏனைய இனங்களுக்கு ஒரு மாபெரும் முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்பதை தெரிவிக்கும் அவர்கள், நினைவுத்தூபி அமைப்புக் குழுவினருக்கு பக்கபலமாக தாமும் இருப்பதை வெளிப்படையாக அறிவித்தும் வருகின்றார்கள்.
இந்நிலையில்,நகரசபை தீர்மானத்திற்கமைய 'கடைசி இனப்படுகொலை நினைவுச் சின்னம்' என்ற தலைப்பில் உலகளாவி கட்டடக்கலை வடிவமைப்பாளர்களுக்கிடையே உலகப் பிரசித்தி வாய்ந்த கட்டடக்கலை அமைப்பினால் போட்டியொன்று நடத்தப்பட்டது.
ஐரோப்பா,அமெரிக்கா, ஆசியா கண்டங்களிலிருந்து பெருமளவில் கட்டிக்கலை வடிவமைப்பாளர்கள் கலந்து கொண்ட அப்போட்டிக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட நினைவுத்தூபி வடிவமைப்புக்கள் தற்போது இறுதித் தேர்வுக்காகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்ததுபோன்ற இனப்படுகொலை இனிமேல் உலகின் எப்பகுதியிலும் நடக்காதிருக்கச் செய்யும் செயல்பாடுகளுக்கு உந்துதல் தரும் வகையில் இந்த நினைவுத்தூபி இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
அதேவேளை,அமையவிருக்கும் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை இறுதியாக வடிவமைக்கும் பணியில் உலகளாவிய தமிழ் கட்டடக்கலை நிபுணர்கள் இணைந்துள்ளனர்.
இக்கட்டத்தில் நினைவுத்தூபி கட்டுமானத்திற்காக தமிழ் மக்கள் தமது பங்களிப்பை செய்வதை உறுதிப்படுத்த நிதிசேர் நிகழ்வுகளை நடத்த வேண்டியதும் நினைவுத்தூபி அமைப்புக் குழுவினரது கடமையாகின்றது.
அந்த வகையில்,இதற்கான முதலாவது ஏற்பாட்டாக ஒரு மாபெரும் நிதிசேர் நிகழ்வு உலகளாவிய நிலையில் இணையம் வழியாக எதிர்வரும் ஜனவரி 22ந்திகதி சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது.
வரலாற்றை எந்தச் சூழலிலும் யாரும் அழித்துவிட முடியாது - தமிழ்த் தேசிய இனத்திற்கு நடந்த இனப்படுகொலையை யாரும் மறந்துவிடவோ மறைத்துவிடவோ முடியாது என்பதை உணர்ந்து இந்த நினைவுத்தூபி அமைவதற்கு பக்கபலமாக இருக்க அனைவரும் இந்த மெய்நிகர் நிதிசேர் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பணிவுடன் வேண்டப்படுகிறீர்கள்.
எதிர்வரும் ஜனவரி 22ஆம் திகதி சனிக்கிழமை கனடா ரோரன்ரோ நேரப்படி பிற்பகல் 3 மணி முதலும், இங்கிலாந்து நேரப்படி இரவு 8 மணி முதலும் ஏனைய ஜரோப்பிய நாடுகளில் இரவு 9 மணி முதலும் மெய்நிகர் நிதிசேர் நிகழ்வு ஆரம்பமாகும்.
இந்த நிகழ்வை பல
தமிழ் தொலைகாட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளன. நினைவுத்தூபி குறித்த
மேலதிக தகவல்களை அறிய விரும்புவோர் tamilgenocidememorial.org,Tamil genoside memorial