உச்சகட்ட பாதுகாப்பின் கீழ் முதலமைச்சர் விஜய்.. 24 மணி நேரமும் 55 மத்திய பாதுகாப்புப் படையினர் உடன்!
இன்று காலை முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தமிழக முதலமைச்சர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பில் இருந்து உச்சக்கட்ட பாதுகாப்பான Z+ பிரிவு அதிகரிப்பட்டுள்ளது.
அதன்படி, 55 மத்திய பாதுகாப்புப் படையினர் கொண்ட குழு அவருக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
குண்டு துளைக்காத வாகனம்
இதில் என்.எஸ்.ஜி கமாண்டோக்கள், ஒரு குண்டு துளைக்காத வாகனம் மற்றும் ஒரு பைலட் காரும் அடங்குகின்றன.

இந்தப் பாதுகாப்புப் படையின் அனைத்து உறுப்பினர்களும் அதிநவீன MP5 சப்மெஷின் துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்தியிருப்பார்கள்.
கூடுதலாக, இதற்கு முன்பு Y பிரிவு பாதுகாப்பைப் பெற்று வந்த முதலமைச்சர் விஜய்யின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஒரு குண்டு துளைக்காத வாகனம் மற்றும் ஒரு பைலட் காரும் வழங்கப்பட்டுள்ளன.
Z+ பிரிவு என்பது முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பாகும். இந்த பாதுகாப்பு, உயிருக்கு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படுகிறது.
ஸ்டாலின் குரல் ஒலிக்காத சட்டசபை..! 39 ஆண்டு வரலாற்றில் சரிந்த திமுகவின் கோட்டை - அதிர்ச்சியில் தொண்டர்கள்
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam