அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள தவெக விஜயின் பதிவு! மறைக்கப்பட்ட அறிக்கை
தமிழக சட்டமன்றத்தேர்தல் 2026 இன் வாக்குப்பதிவு நேற்றுமுன் தினம் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில்,தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்றுமுன் தினம் ( 23) 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
வரலாற்று சாதனையை எட்டியுள்ள வாக்குப்பதிவு வீதம்
தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் 2026 ஆம் ஆண்டின் வாக்குப்பதிவு வீதம் வரலாற்று சாதனையை எட்டியுள்ளது.

இந்நிலையில், நேற்று, தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் ஒரு மகிழ்ச்சி பதிவை வெளியிட்டிருந்தார்.
அந்த பதிவில்‘ ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியலின் வரலாற்றில் ஒரு உச்சகட்ட வரலாற்று நிகழ்வாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 85 வீத வாக்குப்பதிவு என்பது தமிழகம் இதுவரை கண்டிராத ஒன்று. எங்கிருந்தாலும் கோயில்களில் காணப்படும் கூட்டத்தைப் போலவே, சிறு குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக வாக்களிக்க வருவதைக் கண்டு யாரும் வியக்காமல் இருந்திருக்க மாட்டார்கள் என குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்த தரவுகள் மற்றும் அதன் பின்னணியில் அவர் முன்வைக்கும் வாதங்கள் தற்போது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகின்றன.
85 சதவீத வாக்குப்பதிவு என்பது தனது வருகையால் ஏற்பட்ட மாற்றம் என அவர் குறிப்பிடுவது, தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிபரங்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு தரவுகளுடன் ஒப்பிடுகையில் முரண்படுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
SIR முறை ரீதியான சீர்திருத்தங்கள்
இந்த முறை வாக்கு சதவீதம் உயர்ந்து காணப்படுவதற்கு பின்னால் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட SIR முறை ரீதியான சீர்திருத்தங்கள் உள்ளதினையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
வாக்காளர் பட்டியலில் இருந்த இலட்சக்கணக்கான போலி மற்றும் இரட்டைப் பதிவுகள் நீக்கப்பட்டதால், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து. இயல்பாகவே பதிவான வாக்குகளின் சதவீதத்தை உயர்த்தியும் காட்டியுள்ளது.
இந்த அடிப்படை தொழில்நுட்ப மாற்றத்தைப் புரிந்துகொள்ளாமல், இது தனது வருகையினால் ஏற்பட்ட எழுச்சி என்று செல்வது ஒரு மேம்போக்கான விளக்கமாகவே பார்க்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இருப்பினும், புதிய வாக்காளர்களையும், இளைஞர்களையும் வாக்குச்சாவடிக்கு வரவழைப்பதில் தவெக தொண்டர்களின் செயல்பாடுகள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
அதிரடித்திருப்பங்களுடன் வெளியாகவுள்ள முடிவுகள்
இதேவேளை, குறிப்பாக தமிழகத்தில் உள்ள அரசியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி இம்முறை இடம்பெற்ற தேர்தல் பெரும் திருப்புமுணை நிறைந்த தேர்தலாக மாறுமா அல்லது திருப்புமுணை அற்ற தேர்தலாக மாறுமா என்ற மாறுப்பட்ட கருத்தும் நிலவி வருகின்றது.

இந்த முறை 5 முனை போட்டியில் விஜய், சீமான் உள்ளிட்ட பல புதிய சக்திகள் உள்ளதால், தமிழகத்தின் அரசியல் களம் சவால்மிக்கதொரு களமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
இந்த தேர்தல் இறுதி முடிவுகள் பல அதிரடித்திருப்பங்களுடன் வெளியாகவுள்ளமை அரசியல் விமர்சகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச மக்களிடமும் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள தமிழக தேர்தல் முடிவுகள்! வாக்கெண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு
ஜனனியை முடித்துவிட பிளான் போட்ட குணசேகரன், ஆனால்?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam