இணையவழியில் நடாத்தப்படவுள்ள தாய்மொழிச் சிறப்பறிதல் போட்டி! - உலகத் தமிழர்களுக்கோர் வாய்ப்பு
அனைத்துலகத் தாய்மொழி நாளினை முன்னிட்டு அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் இணையவழியில் நடாத்தப்படும் தாய்மொழிச் சிறப்பறிதல் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு அனைத்துலகத் தாய்மொழி நாளினை முன்னிட்டு, அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் தாய்மொழியின் சிறப்பு, தாய்மொழிக் கல்வியின் இன்றியமையாமை தொடர்பான தகவல்கள் அடங்கிய ஏழு பக்கங்களைக் கொண்ட ஆக்கம் ஒன்று ஆக்கப்பட்டுள்ளது.
இவ் ஆக்கத்தில் உள்ள விடயங்களிலிருந்து தெரிவுசெய்யப்படும் வினாக்களுக்கு விடையளிக்கும் தாய்மொழிச் சிறப்பறிதல் போட்டி ஒன்று அனைத்துலகத் தமிழர்கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் இணையவழியில் நடாத்தப்படவுள்ளது.
இப்போட்டியின் விபரம் வருமாறு,
1.இப்போட்டியில் மொத்தம் 20 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும் இவ்வினாக்களுக்கு விடையளிப்பதற்கு 40 நிமிடங்கள் வழங்கப்படும்
2. ஒவ்வொரு வினாவுக்கும் கொடுக்கப்பட்டுள்ள 4 விடைகளுள் பொருத்தமான விடையைத் தெரிவுசெய்தல் வேண்டும்.
3. இப்போட்டியில் பங்குபற்றி 10 வினாக்களுக்கு மேல் சரியான விடையைத் தெரிவு செய்பவர்களுக்கு அதாவது 50 புள்ளிகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு வெற்றியீட்டியமைக்கான சிறப்புச் சான்றிதழ் அவர்களுடைய மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்படும்
4. விடைகளைத் தெரிவுசெய்து சமர்ப்பித்த உடனேயே கணினியில் போட்டியாளர் பெற்ற புள்ளிகள் காண்பிக்கப்படும் 50 புள்ளிகளுக்கு மேல் பெறுபவர்களுக்கான சான்றிதழிலும் பெற்ற புள்ளிகள் குறிப்பிடப்பட்டு, சான்றிதழ்கள் உடனடியாக மின்னஞ்சலில் அனுப்பிவைக்கப்படும்.
5. ஒவ்வொரு போட்டியாளரும் கூடுதல் புள்ளிகளைப் பெறுவதற்கு பலமுறை முயற்சிக்கலாம்.
6. 20.02.2022 ஆம ; நாள் ஞாயிற்றுக்கிழமை மத்திய ஐரோப்பிய நேரம் காலை 9:00 மணிமுதல் மறுநாள் (21.02.2022) காலை 9:00 மணிவரை 24 மணித்தியாலங்கள் இப்போட்டியில் பங்குபற்றலாம்.
7. வயதுக்கட்டுப்பாடு இல்லை. விரும்பிய அனைவரும் பங்குபற்றலாம்.
8. உலக நாடுகள் அனைத்திலுமிருந்து இப்போட்டியில் பங்குபற்றலாம்.
9. இப்போட்டி நடைபெறும் நாளில் https://icedt.education/ எனும் அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் இணையத்தளத்தில் காணப்படும் தாய்மொழிச் சிறப்பறிதல் போட்டி! எனும் இணைப்பை அழுத்துவதன் மூலம் போட்டியில் பங்குபற்றலாம்.
10. போட்டியில் பங்குபற்றும் போது உங்கள் மின்னஞ்சல் முகவரி, முழுப்பெயர் (தமிழிலும், ஆங்கிலத்திலும்), பிறந்தநாள், நாடு ஆகியவற்றைக் குறிப்பிட்டபின் வினாக்களுக்குப் பொருத்தமான விடையைத் தெரிவுசெய்து சமர்ப்பித்தல் வேண்டும்.
தாய்மொழியின் சிறப்பு, தாய்மொழிக் கல்வியின் இன்றியமையாமை தொடர்பான
விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இப்போட்டியின் நோக்கமாகும் எனவும் ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.



