தமிழரசுக் கட்சியின் பன்னாட்டு மகளிர் தின நிகழ்வு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மாதர் முன்னணியினரின் "பன்னாட்டு மகளிர் நாள்" நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்றைய தினம் (10.03.2024) காலை 9.30 மணியளவில் புனித திரேசாள் மேய்ப்புப்பணி நிலைய மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
மகளிர் தின நிகழ்வு
ஈழத்துப் பெண்களும் இனியொரு பலமும் எனும் தொனிப்பொருளில் இந்நிகழ்வானது கிளிநொச்சி மாவட்ட மாதர் முன்னணி தலைவர் முறாளினி தினேஷ் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற சட்டவளவாளர் விஜயராணி சதீஷ்குமார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் , சமூக செயற்பாட்டாளர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி , தமிழரசுக்கட்சி வாலிப முன்னணியின் யாழ். மாவட்ட செயலாளர் கருணாகரன் குணாளன் , தமிழ் அரசுக் கட்சியின் மகளிர் அணியின் பிரமுகர்களான சசிகலா ரவிராஜ் , சி. விமலேஸ்வரி, மிதிலைச்செல்வி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன் கலைநிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்கல் நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


