ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பில் தமிழரசுக்கட்சியினர்.. நடந்தது என்ன!
புதிய இணைப்பு
தமிழரசுக் கட்சியின் 8 நாடளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி உடனான இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டதாக ஞானமுத்து ஸ்ரீநேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் எதிர்வரும் ஆண்டு பேச ஆரம்பிப்போம் என ஜனாதிபதி தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக பேசப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியுடன் திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் குறித்து கலந்துரையாடியதாக தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என ஜனாதிபதி உறுதியளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள், விசேட சந்திப்பொன்றில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளனர்.
குறித்த சந்திப்பு இன்றையதினம் (19.11.2025) பிற்பகல் 1 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

கட்சியின் முக்கியஸ்தர்கள்
இதன்போது, தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்... இத்தனை கோடியா? Cineulagam