தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டு தடை விவகாரம்: மத்திய குழுவின் வழிகாட்டல்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் ஓர் இணக்கத் தீர்வைக் காணுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அக் கட்சியின் மத்திய குழு வழிகாட்டல் வழங்கியுள்ளது.
தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தலைமையில் இன்று (19.05.2024) கூடிய மத்திய குழு கூட்டத்திலேயே மேற்கண்ட வலியுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது, தேசிய மாநாட்டு வழக்கு தாக்கல் செய்த வழக்காளியின் சட்டத்தரணியுடன் கலந்துரையாடி வழக்குக்கு விரைந்து தீர்வு காணுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
எடுக்கப்பட்ட வாக்குறுதிகள்
அதேவேளை, வழக்காளியின் சட்டத்தரணியுடன் உரையாடுவதன் மூலம் வழக்கை நீதிமன்றத்தில் சுமுகமாக முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும் என வாக்குறுதிகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த விடயத்தை சுமந்திரன் (Sumanthiran) , ஏனைய சட்டத்தரணிகளுடன் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |