கொழும்பில் ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் கைது
கொழும்பு 02, முத்தையா வீதி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றின் தரிப்பிடத்தில் ஈரானிய தூதுவரை தாக்கிய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தக நிலையமொன்றின் தரிப்பிடத்திற்குள் தூதுவர் பிரவேசித்த போது, மற்றொரு காரின் சாரதியுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் விசாரணை
இதன்போது குறித்த நபர் தூதுவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார். இருப்பினும் அவர் காரில் சற்று தூரம் பயணித்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு 07 இல் வசிக்கும் முப்பத்து மூன்று வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri