லங்காசிறி ஊடக அனுசரணையில் பிரான்ஸில் நடைபெறவுள்ள 'தமிழர் விளையாட்டு விழா'
எமது கலை, கலாச்சாரம், பண்பாடு, உணவு உண்டு மகிழ்ந்து தாயக உறவுகளுக்கும் உதவும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட தமிழர் பண்பாட்டு விழா 24வது ஆண்டில் 30.07.2023 ஞாயிறு - 9 மணிமுதல் மிகவும் கோலாகலமாக பிரான்சில் நடைபெறவுள்ளது.
பிரான்ஸ் வாழ் தமிழ் பெருமக்களின் பேராதரவுடன், லங்காசிறி ஊடக வலையமைப்பின் ஊடக அனுசரணையுடன் கோடை விடுமுறையை குதூகலமாய் கொண்டாடபடவுள்ளது.
மலிவு விலைக் கடைகள், கலைநிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டுக்கள் (கயிறிழுத்தல், முட்டியுடைத்தல், கலையணைச்சண்டை...) சிறுவர்கள் பெரியவர்களுக்கான சனரஞ்சக விளையாட்டுக்கள் இன்னும் வேடிக்கை வினோத நிகழ்வுகளுடன் தாயக உணவுகளும் தயாராக உள்ளது.
சிறப்பு நிகழ்வாக ராக சங்கமம் நிகழ்ச்சி இடம்பெறவுள்ளதோடு அதற்கான தெரிவு போட்டி வெளி அரங்கில் கோலாகலமாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam
