வெளிநாடொன்றில் தமிழ் இளைஞர்கள் இருவர் சுட்டுக்கொலை
இந்திய - மணிப்பூரில் இருந்து மியான்மரில் குடியேறிய இரண்டு தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டி ஓட்டுநர்களான குறித்த இளைஞர்கள் இருவரையும் காணவில்லை என முறைாப்பாடு செய்யப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிள்களில் வந்த மியான்மர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த இருவரையும் நெற்றியில் சுட்டுக்கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த கொலைக்கான காரணம் வெளியிடப்படாத நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
குற்றவாளிகளை கைது செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம்
இதனிடையே பொது மக்கள் குற்றவாளிகளை கைது செய்யுமாறு வலியுறுத்தி கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், மியான்மரில் உள்ள இரண்டு தமிழர்களின் உடல்களை, இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து அங்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri